தேர்வுப் பணிகளில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில் வழங்க, "டெண்டர்' விளம்பரத்தை டி.ஆர்.பி. வெளியிட்டுள்ளது.


தேர்வுப் பணிகளில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில் வழங்க, "டெண்டர்' விளம்பரத்தை டி.ஆர்.பி. வெளியிட்டுள்ளது. "ஸ்கேனிங், பிரின்ட்டிங், தகவல் தொகுப்பு நிர்வாகம் மற்றும் தேர்வுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என
அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நிறுவனத்திடம், முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பணி வழங்கப்படும். அந்த நிறுவனத்தின் சேவையில் திருப்தி ஏற்பட்டால், ஒப்பந்தம் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், தேர்வுப் பணிகளுக்கு தேவையான அனைத்து மின்னணு சாதனங்கள் மற்றும் தேவையான பணியாளரை நியமனம் செய்ய வேண்டும். ஸ்கேனிங், பிரின்ட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும், டி.ஆர்.பி., இடத்தில் நடக்கும் எனவும், தேர்வு செய்யப்படும் நிறுவனம், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, தினமும் காலை, 9 முதல், மாலை 6 மணி வரை, வேலை செய்ய வேண்டும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது