தமிழகத்தில் இயங்கி வரும்
அரசு / ஊராட்சி
ஒன்றிய தொடக்க
/ நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு
மாவட்டத்திற்கு 10 பள்ளிகள் வீதம்
320 பள்ளிகளில் 2012 - 2013 ஆம் கல்வியாண்டில்
ஆங்கில வழி
வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு
/ ஊராட்சி ஒன்றிய
தொடக்க /
நடுநிலைப்பள்ளிகளில்
சுமார் 160 பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் இயங்கும் பிரிவுகளுக்கு இணையாக ஆங்கிலவழி இணைப்பிரிவுகள் தொடங்கி நடத்திட அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே முதற்கட்டமாக ஒவ்வொரு
மாவட்டத்திலும் 5 பள்ளிகளில் அரசு மற்றும் ஊராட்சி
ஒன்றிய தொடக்க
/ நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு
மட்டும் இரண்டு
ஆங்கில வழி
இணைப்பிரிவுகள் 2012 -13 ஆம் ஆண்டில்
தொடங்க அனுமதி
வழங்கிட ஏதுவாக
அனைத்து மாவட்ட
தொடக்கக் கல்வி
அலுவலர்களும் தங்களது மாவட்ட அளவில், ஊரகப்
பகுதியில் இயங்கும்
10 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க
/ நடுநிலைப்பள்ளிகளை தெரிவு செய்து,
அப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு
ஆங்கில வழி
இணைப்பிரிவுகள் தொடங்க ஏதுவாக அனைத்து விதத்திலும்
ஆய்வு செய்து
அப்பள்ளிகளின் விவரப்பட்டியல் இயக்குனருக்கு
அனுப்பி வைக்க
தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
